தனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாமணி நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 22, 2017

தனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாமணி நியமனம்


தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2015-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நீதிபதி டி.வி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார்

No comments:

Post a Comment