TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 20, 2017

TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment