அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு விளக்குகளுக்கு தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 19, 2017

அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு விளக்குகளுக்கு தடை

வரும் மே 1 முதல் மத்திய அமைச்சர்கள், பெரும்புள்ளிகள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த
தடை விதிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களில் மட்டுமே இத்தகைய விளக்குகள் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
புதன்கிழமை, டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ஜேட்லி இத்தகவலை தெரிவித்தார்.
விதி எண் 108-ன் படி, மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்தெந்த வாகனங்களில், யார்யார் பயன்படுத்தும் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்தலாம் என நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில், மே.1-ம் தேதி முதல் மத்திய அரசோ மாநில அரசோ இத்தகைய நிர்ணயங்களை செய்ய முடியாது.
அதேவேளையில் விதி எண் 108(2)-ன் படி அவசர சேவைகளுக்கான வாகனங்களில் நீல நிற விளக்கு பயன்படுத்தப்படலாம் என்பதில் எந்த விலக்கும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment