ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 4, 2017

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள் தொழில் நடைமுறைக்கு சிரமமாக இருப்பதாக கூறி வாகனப்பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின் மோட்டர் வாகன விதிகளில் இரண்டு முக்கியமான விதிகளை ரத்து செய்து தீர்ப்பு அமைந்துள்ளது.
உரிய காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்னும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதே போல வானங்களை விற்கும் போது தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானால் அபராதம் என்னும்  மத்திய அரசின் மோட்டர் வாகன விதியும் இந்த தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகிறது. 
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment