போலியாக தயார் செய்வதைத் தடுக்கும் வகையில், புதிய வடிவிலான வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 4, 2017

போலியாக தயார் செய்வதைத் தடுக்கும் வகையில், புதிய வடிவிலான வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

போலியாக தயார் செய்வதைத் தடுக்கும் வகையில், புதிய வடிவிலான வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் விநியோகிக்கப்பட உள்ள நவீன வாக்குச் சாவடி சீட்டு மாதிரி.
போலியாக தயார் செய்வதைத் தடுக்கும் வகையில், புதிய வடிவிலான வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக பிரத்யேகமாக வாக்குச் சாவடி சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், 25 சதவீதம் அளவுக்கு வாக்காளரின் புகைப்படம் பெரிதாகத் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே, சிறிய கட்டத்தில் வாக்குப் பதிவு தேதியும், நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்கள்? புதிய வடிவிலான வாக்குச் சாவடி சீட்டில் வாக்காளர் குறித்த பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தொகுதி எண், பெயர், வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, தந்தை அல்லது கணவர் பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், வாக்குச் சாவடி, வாக்குப் பதிவு தேதி ஆகிய அனைத்து விவரங்களும் அட்டவணையிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் சீட்டுக்குப் பின்புறமானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் வாக்குச் சாவடியின் வரைபடம் பெரிதாக இடம்பெற்றுள்ளது. மற்றொரு பகுதியில் வாக்காளர்களுக்கான முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
என்னென்ன தகவல்கள்? வாக்குச் சாவடி நிலை அலுவலரின் பெயரும் செல்லிடப்பேசி எண்ணும் அதில் இடம்பெற்றுள்ளன.
வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். பெண்களுக்குத் தனியே வரிசைகள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை தரப்படுகிறது.
பார்வையற்ற, இயலாத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவிட வயது வந்த நபரை தங்களுடன் வாக்குப் பதிவு அடைப்புக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடிகிறது.
செல்லிடப் பேசி, புகைப்படக் கருவி போன்ற மின்னணு இயந்திரக் கருவிகள் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படாது.
குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப் பணம் கொடுப்பது, வாங்குவது அல்லது வேறு எந்த வகையிலும் பயன்பெறுவது ஆகியன சட்டத்தின் கீழ் ஊழல் நடைமுறைகளாகும் என்ற 5 முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
10 கம்பெனி படையினர்: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10 கம்பெனி படையினர் ஈடுபட உள்ளனர். அதில், 8 கம்பெனி படையினர் ஏற்கெனவே வந்துள்ளனர்.
ஒரு கம்பெனிக்கு 72 படை வீரர்கள் இருப்பதால், மொத்தம் 720 பேர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இருசக்கர வாகனங்களிலேயே சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட 30 நுண் பார்வையாளர்கள் ஆந்திரம், கேரளத்தில் இருந்து வரவுள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment