பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் இன்று வெளியிட்ட ஓர் அரசாணையில், ''தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உள்ள அனைவரும் குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் இளம் வயது மாணவர்கள் முதல்கொண்டு தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டும் அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்த்து உவப்புடன் களித்திடும் பொருட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment