எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 10, 2018

எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில்
இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேறினால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பளம் ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும். அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும்.
சட்டப்பேரவையில் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
அதேவேளையில், எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment