இந்த ஆண்டில்.....நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி???? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 10, 2018

இந்த ஆண்டில்.....நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி????

நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி????

இந்த ஆண்டில்.....,
1. முதலில் கடன்களை முடியுங்கள்:=
தனி நபர்களின் பொருளாதார திட்டமிடு்தளில் முதன்மையாக வலியுறுத்தப்படுவது கடன்கள் இல்லாமல் இருப்பதுதான்.
இது மிக கடினம்தான்!!! ஆனால்....
ஒவ்வொரு கடனையும் அவ்வப்போது அதற்குரிய கால கட்டத்தில் முடிக்க வேண்டியது கட்டாயம். அப்பொழுதுதான்
உங்களுடைய "cibil score" மிக நன்றாக 750 முதல் 800 வரை இருக்கும்.

2. உங்கள் வருமானத்தை அதிகப்படுத்துங்கள்:=
உங்கள் ஓவ்வொருவரின் தனித் திறமைகளை வருமானமாக்கும் வழிமுறைகளைக் கண்டறியுங்கள்...!!!(வேலை நேரம் போக..)
இவ்வாறு கண்டறிவது உங்களால் மட்டுமே முடியும்
3. சேமிப்பை தொடங்கவும்:=
ஒவ்வொரு மாதமும் சேமிப்பது பழக்கமாக இருக்கட்டும். சேமித்தபின் மிகுதி செலவு என்பது வழக்கமாக இருக்கட்டும்.ஒவ்வொரு செலவையும் எழுதி வைப்பது பழக்கமாக இருக்கட்டும். அவை தேவை இல்லாத செலவை நமக்கு புரிய வைக்கும்.
இதேபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற நிதி ஆதாரங்கள் சம்பந்தமான ஆவணங்களை வீட்டில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்வது அவசியம். நாம் மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்ற ரகசியம் கடைப்பிடிப்பதை இந்த வருடத்தில் இருந்து கைவிடுங்கள். இவை உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தக்க சமயத்தில் காப்பாற்றும்.
4.வீண்செலவுகளைத் தவிர்ப்பீர்:=
வீண் செலவுகள் என்று எதுவும் இல்லை. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் வீண் செலவா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.
ஆன்லைன் ஸ்டோரில் ஆஃபர் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்கி பொருட்களை வாங்குவது வீண் செலவுதான்.
நோக்கமில்லாமல் பொழுதுபோக்காக மால்களுக்குச் சென்று பொருள்களை வாங்குவது,
நமக்கு உபயாகப்படாத பொருட்களை அந்தஸ்துக்காக வாங்குவதும், பக்கத்து வீட்டார் வாங்கியதைப் போல் பார்த்து வாங்குவதும் வீண் செலவுதான்.
இவ்வாறு வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.
சேமிப்பை கூட்டலாம்!!!!!
5. காப்பீடுகள்:=
ஒவ்வொரு தனி நபரும் மற்றும் அவர் தம் குடும்பத்திற்கும் கட்டாயம் தேவை கீழ்கண்ட காப்பீடுகள்,
1. Term insurance ( Don't take Ulips, endowment,money back policies).
2. Health insurance with critical care rider policy for u & ur family.(rider is very important)
3. Accidental death & disablity policies (very low premium with high coverage)
4. Ontime renewal of Vehicle insurance policies.(must)
Pls check & ensure, on all the above policies "Nomination" are updated and there is no errors.(V.V.Imp).
மேற்கண்ட காப்பீடுகளின் அநைத்து ஆவணங்களையும் வீட்டார் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். கட்டாயமும் கூட. அனைவரின் கவனத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் அவசியம்.
இதில் ரகசியம் காத்த பல பேரின் குடும்பத்தார் பட்ட கஷ்டம், அதிகம். ஆகையால் இந்த வருடம் ரகசியம் தவிர்ப்பீர்.
[07/01 3:28 PM] Anbarasi owner: 6. முதலீடுகள் (இன்வெஸ்ட்மெண்ட்)

இதுவரை முதலீடுகள் குறித்து யோசிக்காதவர்கள் இனிமேலாவது யோசிக்கவேண்டும்.
மாத திட்டமிடலில் இதற்கும் ஒரு தொகை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் 10 முதல் 30% (of ur salary) வரை இதற்கு ஓதுக்கவேண்டும். மாதாமாதம் தொடர்ந்து ஒரு விரதம் போல் SIP (systematic investment plan) -யை மேற்கொள்ளவேண்டும். ஒரு மாதம் கூட தவறவிடக் கூடாது.
1. நிதி சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் 
a) shares, 
b) mutual funds,
c) Recurring deposit,
d) Postal saving schemes,
2. நிலம் சார்ந்த முதலீடுகள் ( real estate),
3. தங்கம் (கோல்ட்)

ஆகிய மேற்கண்டவற்றில் பிரித்து முதலீடு செய்யவேண்டும்.
ஒரே திட்டத்தில் முதலீடு செய்யக் கூடாது.
7.அவசரகால நிதி (Emergency Fund):=
இப்படி ஒரு தொகை ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணமே பலருக்கு இருப்பதில்லை. ஆனால் மிக மிக அவசியமானது என்கிறார்கள் நிதித்துறை நிபுணர்கள் (financial adviser).
அவசரகால நிதி என்பது, ஒருவர் தனது மாத ஊதியத்தைப்போல 3 அல்லது 6 மடங்கு (6 மாத சம்பளம்) சேமிப்பு இருப்பு வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் (அவசர நேரத்தைத் தவிர) கை வைக்கக் கூடாது என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். சாதாரண செலவுக்கு கூட தொட கூடாது.
இந்த உறுதி உங்களை பல நேரங்களில் காப்பாற்றும்.
உங்கள் நண்பர்கள் (அ) உறவினர்களிடம் கேளுங்கள், இக்கட்டான நேரத்தின் கொடுமையை சொல்வார்கள்.
ஆகையால் அவசர கால நிதியை இந்த வருடத்திலாவது உடனே ஒதுக்குங்கள்.
இவை அனைத்தையும் அடைவதற்கு தேவை.....தேவை....!!?????? (பணமா),
அதைவிட முக்கியம் ........
ஒரு முறையான திட்டமிடல்..!!!!

அதை இந்த புது ஆண்டில் இருந்ததாவது தொடங்குவோம்...!!!

No comments:

Post a Comment