வேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம் : புதிய விதிமுறையை அமல்படுத்த இபிஎஃப்ஓ முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 27, 2018

வேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம் : புதிய விதிமுறையை அமல்படுத்த இபிஎஃப்ஓ முடிவு

வேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம் : புதிய விதிமுறையை அமல்படுத்த இபிஎஃப்ஓ முடிவு
வேலையை இழந்த ஒரு மாதத்திலேயே  வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்)யில் இருந்து 75% பெறும் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 30 நாட்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால் ஓய்வூதியத்திற்காக((பிஎஃப்)) சேமித்த தொகையில் 75%தொகையை உறுப்பினர்கள் திரும்பப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.இதற்கான விதிகளில் திருத்தங்களை செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவரும், தொழிலாளர் துறை அமைச்சருமான சந்தோஷ் குமார் கஙவாட் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி வேலை இழந்த 2 மாதத்தில் தான் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். அதுவும் முழு தொகையை எடுத்து விட்டு அந்த கணக்கை மூட வேண்டும்.ஆனால் இனிமேல் வேலை இழந்த 1 மாதம் ஆகி இருந்தால் 75% தொகையை கணக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம். மீதமுள்ள 25% தொகையின் மூலம் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு உயிர்ப்புடன் இருக்கும். இதற்காக 1952ம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

No comments:

Post a Comment