மருத்துவம், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை : தமிழகத்தில் மருத்துவம், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல்கள் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஜூன் 19ம் தேதி மாலை 5 மணி தமிழகத்தில் உள்ள 6,500 எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ் இடங்களுக்கு 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நாளை தரவரிசைபட்டியல் வெளியாக உள்ளது. மேலும், ஜூலை 1ம் தேதி முதல் 6ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க மருத்துவகல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அதேபோல், மே 3ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் ஜூன் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 49 ஆயிரம் பேர் வரவில்லை. மீதம் உள்ள 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
x
x
No comments:
Post a Comment