புதிய பாடப்புத்தகத்தில் கி.மு, கி.பி. அகற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லை அமைச்சர் கே.பாண்டியராஜன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 27, 2018

புதிய பாடப்புத்தகத்தில் கி.மு, கி.பி. அகற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லை அமைச்சர் கே.பாண்டியராஜன்

புதிய பாடப்புத்தகத்தில் கி.மு, கி.பி. அகற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லை புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி. என்பது பொ.ஆ.மு., பொ.ஆ.பி. என்று மாற்றப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ம.பொ.சி. அறக்கட்டளை, சிலப்பதிகார இயக்கம் சார்பில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின். 113-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தி.நகர் போக் சாலை சந்திப்பில் உள்ள ம.பொ.சி. சிலைக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிலம்புச் செல்வர் என அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றியவர். வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் நம் முன்னே உலா வருவதற்கு அவர் எழுதிய புத்தகங்களே அடிப்படை ஆகும். ம.பொ.சி.க்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்.
பள்ளி புதிய பாடத்திட்டத்தில் கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்), கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) என்பதற்கு பதில், பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து கேட்கிறீர்கள். பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பெயர் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை, அரசியல் உள்நோக்கமும் இல்லை. பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த அறிஞர்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவர்கள். வரலாற்றை மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக் கில் இவ்வாறு மாற்றியிருக் கலாம்.
பள்ளி பாடப்புத்தகத்தில் கி.மு., கி.பி. என்பது பொ.ஆ.மு., பொ.ஆ.பி. என்று மாற்றப்பட்டதற்கு இதுவரை எந்தவிதமான எதிர்ப்போ, புகாரோ அரசுக்கு வரவில்லை.
ஒருவேளை ஏதேனும் விமர்சனங்கள் வந்தால் அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.


No comments:

Post a Comment