தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு, - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 16, 2018

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி உயர்வுக்கு  செல்லும்  ஆசிரியர்கள் கவனத்திற்கு,
98-2000 ல் நியமனம் பெற்றவர்கள்  அடுத்த  ஓராண்டு/
இரண்டாண்டுகளில் தற்போதைய நிலையில் சிறப்பு  நிலை  பெற்றால் இரண்டு  ஊதிய உயர்வு கிடைக்கும்.  பதவி உயர்வுக்கு ஒரு ஊதிய உயர்வு மட்டுமே  கிடைக்கும்.
பதவி உயர்வில்  சென்றால்  ஊதிய இழப்பு ஏற்படும். மேலும்  சிறப்புபடி ரூ 2000  ரத்து செய்யப்படும்.
95-97 ல் நியமனம் பெற்றவர்கள்  அடுத்த  10 ஆண்டுகளில்  ஓய்வு பெற  உள்ளனர்.  
3 ஆண்டு கழித்து  பதவி உயர்வில்  சென்றாலும் பாதிப்பு  இல்லை.
தற்போது 10க்கு கீழ் மாணவர்கள்  உள்ள பள்ளி அருகில் உள்ள  பள்ளியுடன் இணைக்கப்பட்டால் மீண்டும் இடைநிலை ஆசிரியராக இறங்க நேரிடும்.
ஒன்றியத்தில் எந்த பள்ளிக்கும் மாற்றப்படலாம்.
அவர்கள்  பெற்று வரும்  ரூ 500 சிறப்பு படி ரத்து செய்யப்படும்.
இது 1000 அல்லது  1500ஆக  ஒருநபர் குழுவில்  கூட வாய்ப்பு உள்ளது.
மொத்த நிலையில்  இந்த  பதவி உயர்வு  கௌரவித்திற்காக மட்டுமே.
பணப்பலன் பார்த்தால் கடும்  இழப்பேயாகும்
மேற்கண்ட விபரங்கள் தகவலுக்காக மட்டுமே.
தேவைப்படுவோர்  பயன்படுத்தலாம்.
மற்றவர்கள்   கடந்து செல்லலாம்.

No comments:

Post a Comment