பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய ‘ஆப்’ அறிமுகம் - இனி இருந்த இடத்திலேயே பெறலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 27, 2018

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய ‘ஆப்’ அறிமுகம் - இனி இருந்த இடத்திலேயே பெறலாம்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய ‘ஆப்’ அறிமுகம் - இனி இருந்த இடத்திலேயே பெறலாம்
 

இருந்த இடத்திலேயே மொபைல் போன் மூலம்
விண்ணப்பத்தி பாஸ்போர்ட் பெறும் வசதியுடன் கூடிய பாஸ்போர்ட் சேவா ஆப் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கான கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் வேண்டுவோர் அதற்காக நேரில் சென்று விண்ணப்பிக்கும் நடைமுறைதான் தற்போது உள்ளது. பெரிய நகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளதால் மற்ற பகுதி மக்கள் அந்த நகரங்களுக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது.
சில மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், நாடு முழுவதும் எந்த பகுதியில் இருந்து இரும், இருக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும் வசதியை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ (Passport Seva app) என ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியை பயன்படுத்தி பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்க முடியும். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த ஆப்பை இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா சுவராஜ், ‘‘நாடுமுழுவதும் மக்களவை தொகுதிக்கு ஒன்று வீதம், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்கக விண்ணப்பிக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.
ஆப் மூலம் விண்ணப்பித்தால் அந்த பகுதி காவல்துறையினர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு தபாலில் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் அலைச்சல் இன்றி வேகமாக ஒருவர் பாஸ்போர்ட் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment