ஒரு கிராமத்திற்கே கல்வி அறிவு கொடுத்து கொண்டிருக்கும் ஆசிரியர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 14, 2018

ஒரு கிராமத்திற்கே கல்வி அறிவு கொடுத்து கொண்டிருக்கும் ஆசிரியர்


8 ஆண்டுகளாக தன் பள்ளியில் பயின்றுவரும் 1 முதல் 5 வகுப்பறை உள்ள சுமார் 50 மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு மேல் இலவசமாக மாலைவகுப்பு எடுத்து வருகின்றார்..( மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள்) எனவே இந்த குழந்தைகள்..வீட்டிற்கு சென்றால் படிக்க முடியாத சூழ்நிலையும் தனது வீட்டுபாடங்களை செய்யவும் முடியவில்லை. கல்வி அறிவில் பின்தங்கியிருந்தனர்..எனவே கடலூர் மாவட்டம் ஆசிரியர் திருமதி.. Sanjana Srri அவர்கள் தங்கள் வீட்டில் இலவசமாக 8 வருடங்களாக மாலைவகுப்பு எடுக்கதொடங்கினார்..இப்பொழுது இந்த குழந்தைகள் முதல் தலைமுறையாக கல்லூரி செல்ல ஆரம்பித்துள்ளனர்.ஆரம்ப கல்வியில் தேவையான அளவு ஆங்கில அறிவும், அடிப்படை கணிதமும் ,தமிழும்,அறிவியலும் புரிந்து படிப்பதினால் மேல் நிலைபள்ளி செல்லும் பொழுது குழந்தைகள் புரிந்து படிக்க தொடங்குகின்றனர்.அதிக மதிப்பெண் வாங்குகின்றார்கள்....இவரது இந்த தியாக மனப்பான்மையை பாராட்டும் விதமாக #கனிந்தஇதயங்கள் திருமதி. Shyamala Krishnamoorthy அம்மா அனைத்து குழந்தைகளுக்கும் ( பென்,பென்சில், நோட்டுகள், கலரிங் புத்தகம், டிக்ஸ்னரி, வரைபடங்கள், ஆங்கில பாட்டு புத்தகங்கள்) வழங்கியுள்ளோம்..வாழ்த்துகள் Sanja sree சகோதரி தன்னலமற்ற சேவை ஒரு தலைமுறையே கல்வி கற்க செல்லப்போகின்றனர்...
குறிக்கோள் இல்லாத மாணவ வாழ்க்கை, முகவரியில்லா கடிதத்திற்கு சமம். அவர்களின் எதிர்காலம், ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்பத்திலிருந்தே, மாணவர் மனதில் பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை காணும் போது, ஆசிரியரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றும். இதை சொல்வதை விட, உணர்வு பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் பயிலும் மாணவர்களை, நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும், உங்களை சேரும் #கனிந்தஇதயங்கள் திருமதி. Shyamala krishnamoorthy அம்மாவின் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!

நல்ல ஆசிரியரை மனதாரா வாழ்த்துங்கள்!!! இவரை போன்ற அரசு ஆசிரியர் அந்ந ஊருக்கு கிடைத்த வரம்!!! ஒரு கிராமத்திற்கே கல்வி அறிவு கொடுத்து கொண்டிருப்பவர்...

1 comment:

  1. வாழ்த்துக்கள் சகோதரி ...

    ReplyDelete