அறிவோம் வாரம் ஒரு துறை...... காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பதவிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 21, 2018

அறிவோம் வாரம் ஒரு துறை...... காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பதவிகள்

காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IGP)ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Inspector)மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector)இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் (Head Constable)சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I)சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)பட்டை எதுவுமில்லை.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

  1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
  2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
  6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  7. பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
  9. இரயில்வே காவல்துறை (Railways)
  10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
  12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
  13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
  14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
  15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
  16. பயிற்சிப் பிரிவு (Training)

No comments:

Post a Comment