இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 23, 2018

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர்சிறப்பு முகாம் நடக்க உள்ளது.செப்., 1ல், சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பட்டியலில், பெயர் இல்லாவிட்டால், புதிதாக விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, முகவரி மாற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், மூன்று அல்லது நான்கு ஊழியர்கள், இன்று காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பணியில் இருப்பர்.'சிறப்பு முகாமிற்கு செல்ல முடியாதவர்கள்,தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment