ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி: மார்ச் 24 முதல் தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 16, 2019

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி: மார்ச் 24 முதல் தொடக்கம்

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி: மார்ச் 24 முதல் தொடக்கம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான பயிற்சி வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, வரும், 24-ஆம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment