தனக்கு 3 வயதில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியைக்கு பழைய மாணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.! ஆனந்த கண்ணீரில் திகைத்துப்போன ஆசிரியை.
டெல்லியில் உள்ள நகர்புறத்தை சார்ந்தவர் ரோகன் பாசின் (வயது 33). இவர் சிறு குழந்தையாக இருக்கும் போது., இவருடைய மூன்று வயதில் இவருக்கு பள்ளி ஆசிரியையாக சுதா சத்யன் என்பவர்., றோகனுக்கு தேவையான முதற்கல்வியை கற்று கொடுத்துள்ளார்.
இதற்கு பின்னர் ரோகன் பயின்று விமானியாக தற்போது பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அன்று கல்வி சொல்லிக்கொடுத்த ஆசிரியர்தான் காரணம்., அவருக்கு எதாவது அளிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதன்படி., ஆசிரியை சுதாவை டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்து., விமானத்தில் ஆசிரியை ஏறிய பின்னர் அவரது இருக்கையில் விமான ஊழியர்கள் அமர்த்திய பின்னர் அங்கு ரோகன் வந்துள்ளார்.
விமான ஊழியர்கள் மற்றும் விமான பயணிகளிடம் எனக்கு முதன் முதலாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியை இவர்., இவரால்தான் இன்று நான் இந்த நிலையில் உள்ளேன் என்று தெரிவித்தார். இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த பயணிகள்., கைதட்டி ஆரவாரப்படுத்தி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியை எழுந்து மாணவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் நனைந்தது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபரங்களை ரோகனின் தாயார் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து., இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment