மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார்: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா.
புதுக்கோட்டை,மார்ச்.28:புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பாக மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 32 பயனாளிகளுக்கு ரூ.2.78 இலட்சம் மதிப்பிலான,செயற்கை கை,மாற்றியமைக்கப்பட்ட காலனி,நடை உபகரணம் ஆகியற்றை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேல் உடன் இருந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பாசிரியர்கள்,பிசியோதெரபிஸ்ட்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment