TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான
சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம்தொடங்கியது !
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி
இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டிநெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம்இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு
https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்றஇணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment