TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 30, 2019

TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ முதல்வர், தொழில் பயிற்சி உதவி இயக்குநர், தொழில் துறை உதவி பொறியாளர் பதவிகளில் 41காலியிடங்களை நிரப்ப மார்ச் 2-ல் நடைபெற்ற தேர்வு, மாவட்டகல்வி அதிகாரி பதவியில் 20 காலியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 2-ல் நடத் தப்பட்ட தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது. 
 உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் மார்ச் 3-ல் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவும், அதேபோல், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் வரைவாளர் (கிரேடு-3)பதவிக்கு பிப்ரவரி 3-ல் நடத்தப்பட்ட தேர்வின் முடிவும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment