மத்திய நிதியமைச்சகம் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ள வேளையிலும் கடுமையான தட்டமிடல் உடன் உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையைப் போலவே இந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உள்ளது.
ஒருபக்கம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பை ஈடுகட்ட வேண்டும், மறுமுனையில் தொடர்ந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.
இதனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சிக்காக அதிகப்படியான திட்டங்களும், முதலீடுகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, சாமானிய மக்களுக்கு நன்மையை அளிக்கும் வகையில் மிகவும் முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும் சாமானிய மக்கள் அனைவருக்கும் வருமான வரியில் சலுகை அளிக்க வேண்டும், குறிப்பாகக் கொரோனா பாதிப்பு நிறைந்த காலகட்டத்தில் வருமான வரி செலுத்திய கோடிக்கணக்கான மக்களுக்குக் கட்டாயம் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சில வருமான வரி சலுகையை அறிவிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பட்ஜெட் 2022 அறிக்கையில் வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் மத்திய அரசு standard deduction பிரிவில் மாத சம்பளக்காரர்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை அளவீட்டை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் மோடி அரசு பல வருடங்களாக வருமான வரி அளவுகளைக் குறைத்து, வருமான வரி பலகையை மறுசீரமைப்பு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது இதன் மூலம் நடக்காது எனத் தெளிவாகியுள்ளது.
மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும் தற்போது செய்து வரும் ஆலோசனை மூலம் standard deduction பிரிவில் அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை தொகையை 30-35 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது standard deduction பிரிவில் அளிக்கப்படும் 50000 ரூபாய்க்கான வருமான வரி சலுகையை 30-35 சதவீதம் (15000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரையில்) அதிகரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசுக்குத் தனது வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த அதிகப்படியான வருமானம் தேவை, அந்த வகையில் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் இதனைச் சரி செய்து சாமானிய மக்களுக்கு standard deduction மூலம் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளது
இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு உள்ளது இறுதி ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருக்கிறது. இது ஒப்புதல் பெறும் பட்சத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment