இந்த ஆண்டு 2022 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 30, 2022

இந்த ஆண்டு 2022 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு


வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. காலை 11 மணியளவில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

        கொரோனா மூன்றாம் அலை, பணவீக்கம், ஐந்து மாநில தேர்தல் என பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் வரும் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வேலை தேடும் நபர்கள் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். 

    வருமான வரி விலக்கு வரம்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்த்தப்படாமலேயே உள்ளது. எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. 

    கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாக வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவே இல்லை. இந்நிலையில் வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. 

`         எனினும், 5 லட்சம் ரூபாய் என்ற வரம்பு சாத்தியம் இல்லை என்பதால் 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கிறது. இதை 2 லட்சமாக உயர்த்த வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment