அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 31, 2022

அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு.

அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தலைமை கணக்காயா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப்படியில் 7-ஆவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்கப்படும். நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப் படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தொகையை, ஜன.1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment