1) 1/1/22 தற்காலிக துறப்பு செய்தால் அடுத்து எந்த பட்டியலில் இடம் பெற இயலும்?
1/1/26 panel..
2) பதவி உயர்வு பெற்ற பிறகு...
ஜூன்/நவம்பரில் தேர்வு நிலை / சிறப்பு நிலை பெற்ற பிறகு பதவி உயர்வு ஊதியம் நிர்ணயம் செய்ய இயலுமா?
நிச்சயமாக இயலாது...
(தேர்வு நிலை பெற்ற பிறகு ஊதியம் நிர்ணயம் என options வழங்க முடியாது)
3) அப்படி எனில் FR 22B. என்றால் என்ன?
பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
அ) FR-22-B 8(i) பதவி உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம்
ஆ) FR-22-B 8(ii)
கீழ் நிலை பதவியில் ஆண்டு ஊதிய உயர்வு பெற்று பிறகு பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்.
4) இதில் எது சாதகமானது..?
ஆண்டு ஊதிய உயர்வு 6 மாதத்திற்கு உள் எனில் FR-22-B 8
(ii) தான் சாதகம்.
உதாரணமாக..
தங்களின் ஆண்டு ஊதிய உயர்வு ஏப்ரல்.
ஜனவரியில் பதவி உயர்வு எனில் (3 மாதம் தான் இடைவெளி) ஏப்ரல் வழக்கமான ஊதிய உயர்வு பெற்று பிறகு பதவி உயர்வு ஊதியம் எனில் கூடுதலாக (ஒரு cell ) பணப்பலன்...
5) ஊதிய நிர்ணய கடிதம் (option letter) எப்போதும் வழங்க வேண்டும்?
பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள்.
6) எந்த அரசாணை படி பதவி உயர்வு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது?
அரசாணை 311 நிதி (ஊ.கு) 2017.
7) தற்காலிக உரிமை விடல் செய்தால்..
Selection grade/ special grade பலன் கிடைக்காதா?
இப்படி ஒரு தப்பான கருத்து உலா வருகிறது...
இதுவரை அப்படி எந்த ஒரு அரசாணை/சுற்றறிக்கை எதுவும் இல்லை...
சிலர் 30 ஆண்டு spl bonus உடன் இதை குழப்பிக் கொள்கின்றனர்...
பதவி உயர்வு வேண்டாம் எனில் 30 ஆண்டு நிறைவு பணப்பலன் தான் கிடையாது..
8) இந்த மாத ஊதியம் புதிய பணியிடத்தில் சென்று பெறலாமா?
25 தேதிக்குள் ஊதியப் பட்டி சமர்ப்பிக்கப்படும்...
எனவே 31 ஆம் தேதிக்குள் புதிய இடத்தில் பணியில் சேர்ந்தாலும்..
கூடுதல் தொகையை IFHRMS e-challan மூலம் செலுத்தலாம்..
9) கலந்தாய்வில் கலந்து கொண்டு இடத்தை தேர்வு செய்து பிறகு பணியில் சேராமல் துறப்பு செய்ய இயலுமா?
இயலும்...
ஆனால் அடுத்து உள்ள ஒருவருக்கு பதவி உயர்வு பாதிக்கும்.
10) பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் absent ஆகலாமா?
ஆம்.
ஆனால் கடைசியாக உள்ள ஏதோ ஒரு இடத்தை அவர்களாகவே வழங்கி ஆணை அனுப்புவார்கள்.
அதை துறப்பு செய்யும் போது மற்றும் ஒருவர் பதவி உயர்வு பாதிக்கும்... நன்றி
No comments:
Post a Comment