புத்தாண்டில் அகவிலைப்படி (DA) தொகை 2 முதல் 3% வரை அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தகவல்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 14, 2022

புத்தாண்டில் அகவிலைப்படி (DA) தொகை 2 முதல் 3% வரை அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தகவல்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது துவங்கி இருக்கும் புத்தாண்டில் அகவிலைப்படி (DA) தொகை 2 முதல் 3% வரை அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஆண்டுக்கான பம்பர் பரிசை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இரட்டிப்பாகும். மேலும் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து 34% ஆக உயரலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜனவரி 26ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் அமோகமாக உயர்த்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில், AICPI இன்டெக்ஸ் புள்ளிவிவரங்களின் படி குறியீடு 125.7ஐ எட்டியுள்ளது. இதன் விளைவாக 2022 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை குறைந்தது 2 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. அப்படி என்றால் மொத்த தொகை 33 சதவீதமாக அதிகரிக்கும். தற்போது அரசு ஊழியர்கள் 31 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். இருப்பினும், பொருத்துதல் காரணி குறித்து விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து மத்திய ஊழியர்களின் சுமார் 3 ஆண்டுகால கோரிக்கையான ஃபிட்மென்ட் காரணி குறித்தும் அரசு முடிவு எடுக்கலாம் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது, ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 26ம் தேதிக்கு முன், இந்த விவகாரம் தொடர்பாக அரசுப் பிரதிநிதிகளை ஊழியர்கள் அமைப்புகள் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னரே இது தொடர்பாக முடிவெடுக்க முடியும்.

குறைந்த பட்ச சம்பளம் என்ற வகையில் அவர்களுக்கு அரசு பெரிய பரிசை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது AICIP இன்டெக்ஸின் டிசம்பர் தரவு ஜனவரி 2022 இறுதியில் வரும். இதற்கான குறியீட்டு எண் சுமார் 127 என மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீடுகள் சரியாக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் அவர்களின் மொத்த அகவிலைப்படி (DA) 31 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயரும். மேலும் அனைத்திந்திய CPI-IW இன் தற்போதைய தரவுகளிலிருந்து DA தொகை 2% அதிகரிப்பு உறுதி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டால், லெவல் 1 மத்திய ஊழியர்களின் DA மாதம் ரூ.360 அதிகரிக்கும். DA தொகை 3 சதவீதம் உயர்த்தப்பட்டால், அவரது சம்பளம் மாதம் ரூ.540 அதிகரிக்கும். இப்போது, ஃபிட்மென்ட் காரணி குறித்து பேசுகையில், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக இருக்கும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால் அலவன்ஸ்கள் தவிர்த்து அவரது சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும். இதுவே 3.68 என்று வைத்துக் கொண்டால், ஊழியரின் சம்பளம் 26000X3.68 = ரூ.95,680ஐ எட்டும். அதாவது 100 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் அதிகபட்ச சம்பளம் உள்ளவர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment