காலாண்டுத் தேர்வு 2023 வழிகாட்டு நெறிமுறைகள்- வினாத்தாள் பதிவிறக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 18, 2023

காலாண்டுத் தேர்வு 2023 வழிகாட்டு நெறிமுறைகள்- வினாத்தாள் பதிவிறக்கம்

// காலாண்டுத் தேர்வு 2023 // 
 
         6 முதல் 8 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் SCERT மூலம் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்து காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும் 25.08.2023 நாளிட்ட மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
        எனவே உயர்நிலை/மேனிலை/நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்து காலாண்டுத் தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
 
வழிகாட்டு நெறிமுறைகள்- வினாத்தாள் பதிவிறக்கம் 

1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும். 
 
2. இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்னைப் பயன்படுத்தலாம். வருப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் U-DISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம். 
 
 3. Sign in செய்து உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive. பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும். 
 
4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
 
 5. தேர்வு முடிந்த பின்பு Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு 'நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் பின்னூட்டம் வழங்குவதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS/ பள்ளியின் UDISE பதிவெண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ( குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான வினாத்தாளைக் குறித்த காலத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்) 
 
6. பதிவிறக்கம் செய்த PDF வினாத்தாள்களில் பள்ளியின் UDISE எண் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 
 7. சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபடம் பதிவிறக்க வேண்டிய வினாத்தாளுடன் இணைக்கப் பெற்றிருக்கும். அவற்றை அச்சடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிதப் பாடத்துக்குத் தேவைப்படும் வரைதாள்களை (Graph sheet) பள்ளிகளே மாணவர்களுக்கு, வழங்கலாம். 
 
 8 வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் உடனடியாக "14417" எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தொடர்பில்லாத வேறொரு பள்ளியின் கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாளைப் பயன்படுத்தக் கூடாது 
 
9. வினாத்தாள்களை அச்சிடுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்புடைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் (District Coordinators - Samagra Shiksha) வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment