ஆதார் இணைக்காவிட்டால் சேமிப்பு கணக்குகள் முடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 16, 2023

ஆதார் இணைக்காவிட்டால் சேமிப்பு கணக்குகள் முடக்கம்

ஆதார் இணைக்காவிட்டால் சேமிப்பு கணக்குகள் முடக்கம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை தங்கள் சேமிப்பு கணக்குகளுடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 6 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment