தமிழக அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு வேண்டாம்’ - வலுக்கும் கோரிக்கை; சாதக, பாதகங்கள் என்னென்ன?! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 16, 2023

தமிழக அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு வேண்டாம்’ - வலுக்கும் கோரிக்கை; சாதக, பாதகங்கள் என்னென்ன?!

தமிழக அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு வேண்டாம்’ - வலுக்கும் கோரிக்கை; சாதக, பாதகங்கள் என்னென்ன?! இது குறித்து நம்மிடம் பேசிய அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், “ நேர்முகத் தேர்வில் பல குளறுபடிகளைத் தடுக்க, இதை ரத்துசெய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். 
 
        ஆனால், இது குறித்து சங்கம் சார்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கருத்து சொல்ல முடியாது” என்றார்.`நேர்முகத் தேர்வு, தகுதியும் திறமையும்கொண்ட பலரின் வாய்ப்புகளைப் பறித்துவிடுகிறது. அனைவருக்கும் சமநீதியும் சமுகநீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெரும் தடையாக இருக்கிறது.'``தமிழகத்தின் அனைத்து நிலைப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு நடத்துவதை ரத்துசெய்ய வேண்டும்" என்னும் கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. 
 
            திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும்பாலான அரசுப் பணிகள் தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பாக தேர்வு நடத்தி பணிகள் நிரப்பப்பட்டுவருகின்றன. இதில், தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இறுதித் தேர்வாக நேர்முகத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும், இதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
 
            இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசில் அனைத்து நிலைப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் இருக்கும் பல்வேறு பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, தகுதியும் திறமையும்கொண்ட பலரின் வாய்ப்புகளைப் பறித்துவிடுகிறது. 
 
            அனைவருக்கும் சமநீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெரும் தடையாக இருக்கிறது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.ஆந்திரத்தில் முதல் தொகுதிப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 2019-ம் ஆண்டு முதல் நேர்காணல் ரத்துசெய்யப்பட்டிருக்கிறாது. தமிழ்நாட்டிலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இங்கும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 
 
            எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். முறைகேடுகளைத் தடுக்கும். இதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
 
            இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன், ``இதில் சாதகம், பாதகம் என இரண்டும் இருக்கின்றன. நேர்முகத் தேர்வில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். மாற்றுத்திறனாளி தேர்வில் வெற்றியடைந்திருந்தால், அவரை நேர்முகத் தேர்வில் சந்திக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பிரச்னையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். அதேவேளையில், யார் நேர்முகத் தேர்வை நடத்துகிறார், என்ன கேள்வி எழுப்புகிறார் என்பது தெரியாது. எழுத்துத் தேர்விலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.குறிப்பாக, செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை வழக்கு அடிப்படையில் பார்த்தால், தேர்வு நடத்தி அதைப் பதிவுசெய்யும்போது பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. 
 
            இதன் அடிப்படையில் பார்த்தால், எழுதும் தேர்வாக இருந்தாலும், நேர்முகத் தேர்வாக இருந்தாலும் அதில் குளறுபடி நடக்கும். எனவே, அதை வெளிப்படையாக நடத்தினால் எந்தச் சிக்கலும் இருக்காது. இந்தத் தேர்வுத்தாளில் குளறுபடி நடப்பதைத் தடுக்க ஆன்லனில் விடைத்தாள்களைக் காணும் வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தத் தேர்வாக இருந்தாலும் அரசு வெளிப்படையாக இருந்தால், எந்தக் குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. 
 
            அதை அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்றார். இது குறித்து நம்மிடம் பேசிய அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், “ நேர்முகத் தேர்வில் பல குளறுபடிகளைத் தடுக்க, இதை ரத்துசெய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஆனால், இது குறித்து சங்கம் சார்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கருத்து சொல்ல முடியாது” என்றார்.
 
            இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ், ``தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில்தான் திமுக, அரசுப் பணிகளுக்கான தேர்வை நடத்திவருகிறது. நேர்முகத் தேர்வு என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். இதிலும்கூட முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றித்தான் நடத்தப்படுகிறது. இட ஒதுக்கீடு பிடிக்காதவர்கள் இப்படியான அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். இப்போது நேர்முகத் தேர்வு வேண்டாம் என்பார்கள். பின்பு, தேர்வே வேண்டாம் என்பார்கள்.இதில் குளறுபடி நடப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. பேப்பர் திருத்தம் என்பது கணினிமயமாக்கப்பட்டிருக்கிறது. இதில் மனிதத் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. அப்படிச் சில தவறுகள் நடந்திருந்தாலும் அதை மாற்ற திமுக நடவடிக்கை எடுத்துவருகிறது. 
 
            ஆட்சி மாறும்போது, பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடு நடப்பதாகச் சொல்வது உண்மைதான். அதைக் களைவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.ஆன்லைனில் எழுதியதைப் பார்க்க அனுமதித்தால், அது நிர்வாகச் செயல்பாடுகளில் தாமதம், சீர்கேட்டை விளைவிக்கும். கம்ப்யூட்டர் திருத்தும் ஒரு தேர்வுத்தாளில் மனிதப் பிழை ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது எப்படிப் பிழை ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் எனப் புரியவில்லை” என்றார். `ஆனால், மதிப்பெண் மாற்றியிருப்பதாகத்தான் செந்தில் பாலாஜி வழக்கிலும்கூட சொல்லப்பட்டிருக்கிறதே?’ என்னும் கேள்வியை முன்வைத்தோம். 
 
            அவர், “எண்ணிக்கையை மாற்றி எழுதியிருக்கும் சில வழக்குகளைப் பார்க்கிறோம். அப்படியான புகார்கள் எங்கள் ஆட்சியில் வரவில்லை” என்றார். இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன், ``நேர்முகத் தேர்வு என்பது முறைகேடு செய்பவர்களுக்கு வசதி வாய்ப்பாகப் போய்விடுகிறது. எனவே, தேர்வை மட்டும் வைத்து அதன் மதிப்பெண் அடிப்படையில் வேலையை இறுதிசெய்ய வேண்டும். எத்தனை தேர்வுகளைத்தான் அரசு வைக்கும்... அதில் எத்தனையை தேர்வாளர்கள் சந்திப்பார்கள்... 
 
            அது மட்டுமில்லாமல், பேனலில் இருப்பவர்களைத் தேர்வருக்குச் சாதகமான அல்லது பாதகமான முடிவை அரசியல் காரணங்களுக்காகவோ, வேறு தேவைக்காகவோ எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த முறைகேடுகளைத் தவிர்க்க நேர்முகத் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வதே சரியானது” என்றார். அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment