பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 13, 2015

பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு படிப்பாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

         இதற்கான ஆணையை அரசு கடந்த மாதம் 19–ந் தேதி பிறப்பித்தது. அரசின் இந்த முடிவை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
கற்பித்தலில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்கவும், ஆசிரியர்களின் தனித்திறமையை வளர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
புதிய பாடத்திட்டப்படி யோகா, உடல்நல கல்வி, கலை உள்பட 16 பாடங்கள் படிக்க வேண்டும். தற்போது 12 பேப்பர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எட். பட்டப்படிப்பை இரு ஆண்டாக நீட்டிப்பது விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment