தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 15, 2015

தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

 
மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment