கல்வி உதவித் தொகை விண்ணப்பம் வழங்கும் காலம் நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 23, 2015

கல்வி உதவித் தொகை விண்ணப்பம் வழங்கும் காலம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கான காலக் கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, பள்ளிப் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ், 2015-16ம் ஆண்டிற்கு, கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

அதில், முதல் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், விண்ணப்பங்களை தங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில், கடந்த, 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடு, அடுத்த மாதம், 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்களை, அடுத்த மாதம், 31ம் தேதிக்குள், கல்வி நிலையங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

அதே போன்று, 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், www.scholarship.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு மற்றும் கல்வி நிலையங்கள் விண்ணப்பத்தை ஆன் லைன் மூலம் அனுப்ப வேண்டிய காலக்கெடு ஆகியவையும், அடுத்த மாதம், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித் தொகையை உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு, சங்கர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment