ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 23, 2015

ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்

மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல் நடக்கிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தை இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நடத்துகின்றனர். இதில் தேர்ச்சி குறைவிற்கான காரணம் குறித்து தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும், இக்கல்வியாண்டில் தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு முடிவுகள் குறித்து மண்டலம் வாரியாக இக்கூட்டங்கள் நடக்கின்றன. கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் இக்கூட்டம் நடக்கிறது.

கல்வி அமைச்சர் வீரமணி, துறை செயலர் சபீதா பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment