நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 4, 2015

நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-IIல் (Group-II) நேர்காணல் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 2266 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணைய வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

1130 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.11.2014 மற்றும் 09.11.2014 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

அதில் 11497 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 5635  விண்ணப்பதாரர்களிலிருந்து நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்காணல் தேர்வு 15.07.2015 அன்று முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment