தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 4, 2015

தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி கணக்குகள் பற்றிய விவரத்தை அளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மண்டலவாரியாக வார அடிப்படையில் தகவல்களை தாக்கல் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் தங்க மகள் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சுகன்யா சம்ரிதி வங்கிக் கணக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு உள்ள வரவேற்பு குறித்து அறிவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதற்கிடையே, சுகன்யா சம்ரிதி கணக்குகளை அதிக அளவில் தொடங்கியதில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் வங்கி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.இந்த இரண்டு வங்கிகளில் மட்டும் இதுவரை சுமார் 10 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

No comments:

Post a Comment