2029-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசு இந்தியா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 28, 2015

2029-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசு இந்தியா?

உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சீனா விளங்குகின்றன.

இந்த நிலையில் உலக நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலவரம் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘சி.இ.பி.ஆர்.’ என்னும் பொருளாதார வணிக ஆராய்ச்சி சிந்தனையாளர் மையம் கணித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 2029-ம் ஆண்டில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும். அமெரிக்கா, முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு சரியும். இந்தியா மூன்றாவது பெரிய வல்லரசாக உருவாகும்.

* 2030-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 ஆயிரத்து 133 பில்லியன் டாலர்களாக உயரும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34 ஆயிரத்து 338 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். 2-வது இடத்துக்கு செல்லும் அமெரிக்காவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 32 ஆயிரத்து 996 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

* 2019-ம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கும்.

* ஜி-8 அமைப்பில் இன்னும் 15 ஆண்டுகளில் ஐரோப்பாவின் 3-வது, 4-வது பொருளாதார நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடங்களை இந்தியாவும், பிரேசிலும் கைப்பற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment