மொபைல் போன் வேண்டாம் கல்வி அதிகாரி அறிவுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 31, 2015

மொபைல் போன் வேண்டாம் கல்வி அதிகாரி அறிவுரை

வெள்ள பாதிப்புகளை மறந்துவிட்டு, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும், என, மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி கல்வி அதிகாரி ரஞ்சனி அறிவுரை வழங்கினார்.

தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

சென்னை மாணவர்கள், எப்படியாவது நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைத்து தான், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இயற்பியலில் யாராவது பெயிலாக முடியுமா என, இங்கு பாடம் நடத்திய ஆசிரியர் கேட்டார். தேர்வுக்கு செல்லாமல் இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியாது. அனைவரும் தேர்வுக்கு செல்வீர்கள்; வெற்றி நிச்சயம். ஆசிரியர்கள் கூறுவதை மதித்தால் மட்டுமே, 200க்கு 200 மதிப்பெண் பெற முடியும்.

வெள்ளத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை மறந்துவிட்டு, தேர்வுக்கு தயாராகுங்கள். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலத்தில் இருப்பதை உணர்ந்து படியுங்கள். மற்ற வேலைகளை, இரண்டு மாதத்திற்கு ஒதுக்கி வைத்து படியுங்கள். சில நாட்களுக்கு நண்பர்களை கைவிடுங்கள்; மொபைல் போனை, ஆப் செய்யுங்கள்; டிவி பார்க்காதீர்கள்.

இப்படி நாங்கள் சொல்வது உங்களுக்கு விளையாட்டாக தெரியும்; கஷ்டமாக இருக்கும். எனினும், அவற்றை ஒதுக்கிவிட்டு படியுங்கள். இதுவரை படிக்காமல் இருந்தாலும், இரண்டு மாதத்தில் நன்கு படித்தால், வெற்றி நிச்சயம்; வெற்றி பெற்றால் மட்டுமே, வளமான எதிர்காலத்தை பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment