30 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 25, 2015

30 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை!

அண்ணா பல்கலையின் இணைப்பு பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டில், 325 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை கோரப்பட்டு உள்ளது; 30 கண்டு பிடிப்புகளுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரி மாணவர்கள், புதிய பொருட்களை கண்டுபிடித்து, அதற்கு அண்ணா பல்கலை வழியே காப்புரிமை பெறுவது வழக்கம்.இந்த அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், 39 கல்லுாரிகள், 325 புதிய கண்டுபிடிப்புகளை, பல்கலைக்கு அனுப்பின. அவற்றை ஆய்வு செய்து, முதற்கட்டமாக, 30க்கு, அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் மூலம், காப்புரிமை பெறப்பட்டு
உள்ளது.இதில், கோவை மண்டல கல்லுாரிகள் தரப்பில், 224 கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை கோரப்பட்டது; 18க்கு வழங்கப்பட்டது. சென்னை மண்டல கல்லுாரிகள் சார்பில், 97 கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு, 10க்கு காப்புரிமை பெற்றுள்ளன. மதுரை மண்டல கல்லுாரிகளின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை கிடைத்துள்ளன.

சோலார் ரயில்
அண்ணா பல்கலைக் கழகத்திற்குள், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக்கான, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரி செயல்படுகின்றன. இந்த மூன்று கல்லுாரிகளுக்கு பயன்படும் வகையில், சூரிய சக்தி திட்டத்தை உருவாக்க, மத்திய எரிசக்தி அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்படி, பல்கலை வளாகத்தில், பேட்டரியில் இயங்கும் ரயில் போல், சூரிய சக்தியில் இயங்கும் வளாக ரயில் இயக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கான திட்ட வரைவு, மத்திய எரிசக்தி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment