செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு - படம் எடுத்து அனுப்பியது நாசா விண்கலம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 29, 2015

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு - படம் எடுத்து அனுப்பியது நாசா விண்கலம்

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர்  புகைபடங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

மேலும் கியூரியாசிட்டி பல் வேறு பகுதிகளை தூளையிட்டு மண் மாதிரிகளை எடுத்து சோதனைகளை மேற்கொண்டு  அதன் ஆய்வு அறிக்கைகளையும் அனுப்பி வருகிறது.சமீபத்தில் கியூரியாசிட்டி  ரோவர்  மவுண்ட்சார்ப் ஏரியாவில் மான் தோல் போல் இருக்கும் பாறை பகுதியை தோண்டி மாதிரியை எடுத்து ஆய்வில் ஈடுபட்டது.அவ்வாறு தோண்டிய போது அங்கு அரிய கனிமங்களும்  மற்றும் தொந்தரவு தரும் நீல நிற தூசியும் வெளிப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு  ஏற்பட்டு உள்ளது அதனை கியூரியாசிட்டி மண் குவியலுடன் கூடிய படததை எடுத்து அனுப்பி உள்ளது. ஒரு பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவு  பாறாங்கல் மற்றும் மணலால் மூடப்பட்டிருக்கும் காட்சியை அந்த புகைப்பட்ம் காட்டுகிறது. இந்த் நிலச்சரிவு சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது.   பல  தனிபட்ட கற்பாறைகள் சரிந்து உள்ளன. என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment