மாணவர்கள் வேண்டுகோள் உதயமானது தேர்வு மையம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 30, 2015

மாணவர்கள் வேண்டுகோள் உதயமானது தேர்வு மையம்

தர்மபுரி: கோட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பேகராஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அரூர் அடுத்த பேகராஹள்ளி, பிக்கிலி, எஸ்.அம்மாபேட்டை உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவ, மாணவிகள் தீர்த்தமலையில், பொதுத்தேர்வு எழுதி வந்தனர். போதிய பஸ் வசதியில்லாத இப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு, பல மணி நேரங்களுக்கு முன் தயாராகி வரவேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதே போன்று பாலக்கோட்டை அடுத்த பேகராஹள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி வந்ததால், சிரமம் அடைந்து வந்தனர். கோட்டப்பட்டி மற்றும் பேகராஹள்ளியில், பொது தேர்வு மையம் அமைக்க, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:

கோட்டப்பட்டி மற்றும் பிக்கிலி, எஸ்.அம்மபோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களின் வேண்டுகோளின் படி, கோட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்பகுதிகளை சேர்ந்த, 231 மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், பேகராஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில், வரும் மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 பொதுதேர்வை அப்பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியில் எழுதும் வகையில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment