டிசம்பர் -27 லூயி பாஸ்ச்சர் பிறந்ததினம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 27, 2015

டிசம்பர் -27 லூயி பாஸ்ச்சர் பிறந்ததினம்.

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று அறிந்தார்.
வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி
இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறியவிலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.
பாஸ்ச்சரைசேஷன்
பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன்(பாச்சர்முறை) என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.
நுண்ணுயிரியல்
நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர்.

No comments:

Post a Comment