90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 26, 2015

90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்:

ஜனவரி 2-ந்தேதி வினியோகம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை உள்ள 90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவம், 2-வது பருவம், 3-வது பருவம் என்று 3 பருவங்களாக கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாணவர்களின் புத்தக சுமை குறைந்து விடுகிறது.

மாணவ-மாணவிகளுக்கு 2-வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக 2-வது பருவத்திற்கு உரிய பாடங்களை ஆசிரியர்களால் நடத்த முடியவில்லை.

இந்த நிலையில் ஜனவரி 2-ந்தேதி விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. எனவே மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த அன்றே 3-வது பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக 31-ந்தேதிக்குள் புத்தகங்களை குடோன்களில் இருந்து எடுக்கும்படி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment