வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் 3-வது நாளாக இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் புதுச்சேரி நகர் பகுதியில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கிராமப்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் கனமழை பெய்தபோது நகரப்பகுதி பெரும் வெள்ளத்திற்குள் சிக்கியது. அதனை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரி நகரம் முழுவதும் வாய்க்கால்கள் துர்வாரப்பட்டு வருகின்றன.
இதனால் இம்முறை கனமழை பெய்தாலும் புதுச்சேரி பாதிக்காது என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment