தமிழகத்தில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.
85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்பட உள்ள 85 பணியிடங்களில் 30 துணை ஆட்சியர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு, 22 வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பணியிடங்கள்.
தேர்வு முறைகள் முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான எழுத்துத்தேர்வு வரும் 2017 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரும் 9-ஆம் தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.
வரும் 6-ஆம் தேதி 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் ஏராளமானோர் பட்டதாரிகளே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment