"சார்க்' உறுப்பு நாடுகளின் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த வகை செய்யும் தெற்காசிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர்
ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், இதை தெரிவித்தார். இந்த செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு சேவைகள், தொலைத் தொடர்பு மருத்துவ சேவைகள் உள்ளிட்டவற்றை "சார்க்' நாடுகளுக்கு வழங்க முடியும்.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு பாகிஸ்தான் உடன்படாததால், தெற்காசிய செயற்கைக்கோள் என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதனை வடிவமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. "சார்க்' நாடுகளைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதத்தில் அதனை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment