எந்த ஆண்டில் எந்த ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 9, 2016

எந்த ஆண்டில் எந்த ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டது?

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு
முன்பும் அவ்வாறு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்துள்ள ரூபாய் நோட்டுகளிலேயே மிகவும் அதிக மதிப்புடைய தொகை 10,000 ரூபாய்க்கானதாகும். அது 1938-ஆம் ஆண்டிலும் பின்னர் 1954-ஆம் ஆண்டும் அச்சடிக்கப்பட்டன. எனினும், 1978-ஆம் ஆண்டில் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கடந்த 1946-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்த சில நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
கடந்த 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு ரூ.1,000, ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பின்னர், அதிக மதிப்பிலான ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ஆகிய நோட்டுகள் 1954-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.பின்னர் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் 1000 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.500 நோட்டு, கடந்த 1987-ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தது.எனினும், ரூ.2000 நோட்டு தற்போதுதான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment