2017 Budget special : INCOME TAX 10சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 5 சதவீதமாகக் குறைப்பு.
இன்று அறிவிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை அறிவித்தார்.மேலும், வருமான வரி சமர்ப்பிக்கும் படிவம் எளிமையாக்கப்படும்.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,50 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கான உச்ச வரம்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு.வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment