அரசுப்பள்ளி VS தனியார்பள்ளி !! கல்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 12, 2017

அரசுப்பள்ளி VS தனியார்பள்ளி !! கல்வி

விவசாயம்
செய்யுமிடம்
அரசுப்பள்ளி.

வியாபாரம்
செய்யுமிடம்
தனியார் பள்ளி.

வறுமைக்காக
அரசுப்பள்ளி
பெருமைக்காக
தனியார் பள்ளி.

மூட்டை தூக்கியவன்
பிள்ளையை
முதலாளியாக்கும்
அரசுப்பள்ளி.
முதலாளியையே
மூட்டை
தூக்கவைக்கும்
தனியார் பள்ளி.

தாய்மொழியை
அள்ளிக்கொடுக்கும்
அரசுப் பள்ளி.
தாய்மொழியை
தள்ளி வைக்கும்
தனியார் பள்ளி.

கற்றலைக்
கரும்பாக்கும்
அரசுப்பள்ளி
கற்றலை
இரும்பாக்கும்
தனியார் பள்ளி.

கல்வி
வளர்ச்சிக்கு
அரசுப்பள்ளி
கட்டிட
வளர்ச்சிக்கு
தனியார் பள்ளி.

எதுவும் இல்லாதவனுக்கு
எல்லாம் கிடைக்கும்
அரசுப்பள்ளி.
எல்லாம்
இருப்பவனுக்கு
எதுவும் கிடைக்காது
தனியார் பள்ளி.

No comments:

Post a Comment