உலக நாடுகளிலேயே முதன்முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கும் புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஸ்லாந்தில் ஆண்களைவிட பெண்களுக்கு ஊதியம் 14-18% குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் அந்நாட்டு பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இருபாலருக்கும் சமமான ஊதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பிஜார்னி பினிடிக்ட்சன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 30 நாட்களுக்குள் தகுந்த சான்றிதழ்களைப் பெற வேண்டும் எனவும் பிஜார்னி தெரிவித்துள்ளார். 25 ஊழியர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு இந்தப் புதிய சட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2020 ஆண்டுக்குள் இந்தப் புதிய சட்டம் ஐஸ்லாந்து முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அரசின் கொள்கை முடிவுகளை சரியாகப் பின்பற்றி வருகிறதா என்பதை அரசாங்கத்திடம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment