மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆதார் அட்டையை மதிய உணவு திட்டத்தோடும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தோடும் இணைத்ததற்கு மத்திய அரசை தாக்கு பேசியிருக்கிறார்.
மத்திய அரசு ஏழைகளுக்கு உதவாமல், அவர்களுடைய உரிமைகளை பறிப்பதாக தெரிவித்திருக்கிறார். “இனி (0-5 வயது) குழந்தைகளுக்கும் ஆதார் அட்டைகள் தேவைப்படும்? மதிய உணவு திட்டத்திற்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கும் ஆதார் அட்டையா? அதிர்ச்சியளிக்கிறது! நூறு நாள் வேலை திட்டமும் விட்டு வைக்கப்படவில்லை” என அவர் ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.
மேலும், “ ஏழைகளில் ஏழைகளான குழந்தைகளுக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்கள் உரிமைகள் ஏன் பறிக்கப்படுகின்றன?” என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த வாரம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம் எனும் அறிக்கையை வெளியிட்டது. மதிய உணவு திட்டத்திற்கு சமைக்கும் சமையல்காரர்கள், உதவியாளர்கள் என அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்படுகிறது.
No comments:
Post a Comment